ஆதாரை எதற்காவெல்லாம் பயன்படுத்தலாம்? ஆதார் மூலமான பயன்பாடுகள் என்னென்ன? ஆதார் மூலமான பயன்பாடுகள் மூலம் வசிப்பாளர் எவ்வாறு பயனடைவார்?

இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புமற்றும்/அல்லது ஓர் அமைப்பால் வழங்கப்படும் சேவைகள்/பயன்களைப் பெற வசிப்பாளருக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தருவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட திட்டங்களை வழங்குவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம்.
  • உணவு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள்- பொதுவினியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்.
  • வேலைவாய்ப்பு- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுவர்ண ஜெயந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், இந்தியா வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
  • கல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி பெறும் உரிமை
  • சமூக உள்ளடக்கம் &சமூகப் பாதுகாப்பு - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஆதி பழங்குடி குழுக்கள் மேம்பாடு, இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்
  • சுகாதாரச் சேவை: தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஜனஸ்ரீ காப்பீட்டுத் திட்டம், ஆம்ஆத்மி காப்பீட்டுத் திட்டம்
  • சொத்துப் பரிமாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை போன்ற பிற பயன்பாடுகள்.