இணையதளக்-கொள்கைகள்

இது ஆதார்( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”)-ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்ட மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமான இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் இணையதளம் ஆகும். இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வடிவமைத்து,உருவாக்கப்பட்டுபராமரிக்கப்படுகிறது. இதன் உள்ளடக்கமும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தினால் வழங்கப்படுகிறது .

பொதுமக்களுக்கு தகவல் வழங்க இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI,) பற்றிய நம்பத்தகுந்த, விரிவான, துல்லியமான தகவல்களை வழங்குகிறது.இந்திய அரசின் பிற தளங்கள்/ இணையதளங்களை பார்ப்பதற்கான இணைப்பு பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டிருக்கிறது..

இந்த தளத்தின் உள்ளடக்கம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சி ஆகும். இந்த இணையதளத்தின் உள்ளடக்கம்,வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை தொடர்ச்சியாக விரிவுபடுத்துவதும், செறிவூட்டுவதும் எங்களின் பணியாகும்.


நன்றி

இணைய அமைப்பாளர்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இணையத்தளம்

மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.