பதிப்புரிமை கொள்கை

இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளவிவரங்களை இலவசமாக மறுபதிப்பு செய்யலாம். எனினும்,மறுபதிப்பு என்பது துல்லியமாக இருக்கவேண்டும். இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது தவறான பொருள் தரும் வகையிலோ மறுபதிப்பு செய்யப்படக்கூடாது. இதிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பதிப்புக்கப்பட்டாலோ அல்லது பிறருக்கு வழங்கப்பட்டாலோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டும். எனினும், மூன்றாவது நபரால் பதிப்புரிமை பெறப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட விஷயங்கள் ஏதேனும் இதில் இருந்தால், மறுபதிப்பு செய்ய வழங்கப்பட்ட அனுமதி அதற்கு பொருந்தாது. அவற்றை மறுபதிப்பு செய்வதற்கான அனுமதி பதிப்புரிமை வைத்திருப்பவர்கள்/ துறைகளிடமிருந்து பெறப்பட வேண்டும்

ஆராய்ச்சி அல்லது தனிநபர் ஆய்வுக்காக இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களின் சாரத்தை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம், மறுபதிப்பு செய்யலாம் அல்லது மொழிபெயர்ப்பு செய்யலாம். ஆனால், விற்பனைக்காகவோ, வணிகப் பயன்பாட்டுக்காக இணைத்து பயன்படுத்துவதற்கோ அவ்வாறு செய்யக்கூடாது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் எந்த அடிப்படையில் பயன்படுத்தினாலும், அதில் இந்த தகவல் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது, சம்பந்தப்பட்ட தகவல் உள்ள பக்கத்தைக் காட்டும் (URL) இணைப்புடன் குறிப்பிடப்பட வேண்டும். இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை மறுபதிப்பு அல்லது மொழியாக்கம் செய்தல், கல்வி அல்லது வணிக நோக்கம் அல்லாத பயன்பாடுகளுக்காக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எழுத்து மூலம் முன்கூட்டியே அனுமதி பெறப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விசாரணைகள் webadmin[-]uidai[@]nic[.]inஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்..