ஆதார்பற்றி

ஆதார்என்பதுஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்வரையறுக்கப்பட்டசரிபார்ப்புநடைமுறைகளின்படி, இந்தியவசிப்பாளர்களின்அடையாளத்தைசரிபார்த்துதிருப்திஅடைந்தபின்னர்அவர்களுக்குவழங்கப்படும் 12 இலக்கஅடையாளஎண்ஆகும். இந்தியவசிப்பாளராகஇருக்கும்எவர்ஒருவரும்அவரதுவயது, பாலினம்ஆகியவற்றைபொருட்படுத்தாமல்ஆதார்எண்பெறுவதற்காகதாங்களாகமுன்வந்துபதிவுசெய்துகொள்ளலாம். ஆதாருக்காகபதிவுசெய்துகொள்ளவிரும்பும்தனிநபர்கள், முழுக்கமுழுக்கஇலவசமாகசெய்யப்படும்ஆதார்நடைமுறையின்போது, தங்களின்டெமோகிராபிக்தகவல்களையும், உடற்கூறுதகவல்களையும்வழங்கவேண்டும். ஆதார்எண்ணுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் ஒரே ஒருமுறை செய்தால் போதுமானது. டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு பதிவு இரட்டை பதிவு நீக்க நடைமுறைகளின் மூலம் தனித்துவம் ஏற்படுத்தப்படுவதால் ஒரே ஒரு ஆதார் எண் மட்டுமே உருவாக்கப்படும்

ஆதார் எண்ணை ஆன்லைன் முறையில் குறைந்த செலவில் சரிபார்க்க முடியும். ஆதார் எண் போலிகளையும், போலி அடையாளங்களையும் நீக்குவதற்கு தேவையான வலிமையையும், தனித்துவத்தையும் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசு நலத் திட்டங்களில் சிறப்பான சேவை வழங்குவதற்கான அடிப்படை/முதன்மை அடையாளமாக ஆதாரை பயன்படுத்த முடியும், அதன்மூலம் வெளிப்படைத்தன்மையையும், நல்லாட்சியையும் மேம்படுத்த முடியும். உலகில் இதுபோல் செயல்படுத்தப்படும் திட்டம் இது ஒன்று தான். இத்திட்டத்தில் வசிப்பாளர்களுக்கு மின்னணு மற்றும் ஆன்லைன் அடையாளம் பெருமளவிலான மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் சேவை வழங்கல் முறையையே தலைகீழாக மாற்றும் தன்மை கொண்டது.

ஆதார்எண்ணில்நுண்ணறிவோஅல்லதுஜாதி, மதம், வருமானம், சுகாதாரம் மற்றும் பூகோள அடிப்படையில் தகவல்களை தொகுக்கும்முறையோஇல்லை. ஆதார் எண் என்பது அடையாளச் சான்று மட்டுமே. எனினும், இது ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை அல்லது வசிப்பிட உரிமை வழங்குவதில்லை

ஆதார்என்பதுசமூகமற்றும்நிதிஉள்ளடக்கம், பொதுத்துறைவினியோகசீர்திருத்தங்கள், நிதிபட்ஜெட்களைநிர்வகித்தல், வசதியைமேம்படுத்துதல், தடையற்றமக்களைமையப்படுத்தியநிர்வாகத்தைமேம்படுத்துதல்ஆகியவற்றுக்கானஉத்தி சார்ந்த கொள்கைகருவியாகும். சமுதாயத்திலுள்ள நலிவடைந்த மற்றும் ஏழை மக்களுக்கு நிதிச் சேவைகளை வழங்க உதவுவதுடன், நிலையான நிதி முகவரி அளிக்கவும் ஆதாரை பயன்படுத்தலாம் என்பதால் ஆதார் நீதி மற்றும் சமத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கான கருவியாக திகழ்கிறது. ஆதார் அடையாள தளத்தில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாளம் வழங்கப்படுவதால், இது டிஜிட்டல் இந்தியாவின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும். ஆதார் திட்டம் ஏற்கனவே பல மைல்கற்களை சாதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய அளவிலான உட்யற்கூறு சார்ந்த அடையாள அமைப்பாக ஆதார் திகழ்கிறது.

ஆதார் அடையாளத் தளம் அதன் தனித்துவம், சரிபார்ப்பு, நிதி முகவரி மற்றும் ’மின்னணு – அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை” வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வசிப்பாளருக்கும் பல்வேறு வகையான மானியங்கள், பயன்கள், மற்றும் சேவைகளை வசிப்பாளர்களின் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி நேரடியாக வழங்க அரசாங்கத்துக்கு உதவு செய்கிறது.