வசிப்பாளர்களின் ஆதார் பதிவின்போது ஆபரேட்டர் நினைவில் கொள்ள வேண்டிய 15 கட்டளைகள் என்னென்ன?

  • பதிவு மையத்தில் ஆபரேட்டரின் பணி என்பது வசிப்பாளரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆதாருக்காக பதிவு செய்வது தான். ஆதார் பதிவு மையத்தில் இந்த பணியைச் செய்யும் போது கீழ்க்கண்ட 15 கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
  • ஆதார் கிளையண்ட் மென்பொருளில் உங்களின் சொந்த ஆபரேட்டர் பயனர் அடையாளத்தில் உள்நுழைந்து பதிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் இருக்கையிலிருந்து வெளியில் செல்லும்போது மென்பொருளில் இருந்து வெளிவந்து விடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் கணக்கில் வேறு எவரும் உள்நுழைந்து பதிவு செய்யாமல் தடுக்க முடியும்.
  • ஒவ்வொரு நாளும் பதிவைத் தொடங்கும் போது ஜி.பி.எஸ்சை பதிவு செய்வது ஒருங்கிணைப்புக்கு உதவும்.
  • ஒவ்வொரு முறை மென்பொருளில் உள்நுழையும் போதும் கணினியில் தேதி, நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பதிவு நிலையத்தின் தள அமைப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் பதிவுக்காக வரும் வசிப்பாளரின் பதற்றத்தைப் போக்கி, அவரை இயல்பான மனநிலையில் வைக்கவும், அதேநிலையில் அவரது தகவல்களை பதிவு செய்யவும் வசதியாக ஆதார் பதிவு/ ஆதார் தகவல் சேர்ப்பு நடைமுறைக்கு முன்பாகவும், நடைமுறையின் போதும் அதுபற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • வசிப்பாளருக்கு ஆதார் பதிவைத் தொடங்குவதற்கு முன்பாக ஆதாரைக் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி, அவர் அதற்கு முன் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • ஒரு வசிப்பாளரால் வேண்டப்படும் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு வேண்டுகோளுக்கு ஏற்ற வகையில் அனைத்து மூல ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? அவை அனைத்தும் வசிப்பாளருடையது தானா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • வசிப்பாளர்களுடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ள வசதியாகவும், ஒருமுறை கடவுச்சொல் சார்ந்த சரிபார்ப்புக்காகவும், ஆன்லைன் தகவல் சேர்ப்பு வசதிக்காகவும் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • வசிப்பாளரின் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டனவா? அவற்றில் சரிபார்ப்பவரின் கையெழுத்து/கைரேகை மற்றும் முத்திரை/ இனிஷியல்கள் உள்ளனவா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். அந்த படிவத்தில் வசிப்பாளரின் கையெழுத்து/கைரேகையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • வசிப்பாளரின் உடற்கூறு பதிவுகள் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படாது என்பதையும் வசிப்பாளர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அறிமுகம் செய்து வைப்பவர்/குடும்பத் தலைவர் மூலமான ஆதார் பதிவு என்றால் விண்ணப்பப் படிவத்தில் அவர்களின் கையெழுத்து/கைரேகையும், அவர்களுக்கான பகுதியில் அவர்களைப் பற்றிய விவரங்களும் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் கிளையண்ட் மென்பொருளில் தகவல் பதிவுக்காக தரப்பட்டுள்ள வரிசைப்படி டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதார் பதிவு/தகவல் சேர்ப்பின் போது வசிப்பாளருக்கு முன்புள்ள கணினி திரை எப்போதும் இயங்குவதை உறுதி செய்வதுடன், அதில் தெரியும் தகவல்களை பார்த்து, ஆய்வு செய்து அதன் பிறகே பதிவை முடித்து அவர் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் பதிவு முடிவடைந்தவுடன் ஒப்புகைச் சீட்டை அச்சிட்டு, கையெழுத்திட்டு வசிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதேபோல் வசிப்பாளரின் ஒப்புதல் கையெழுத்தையும் பெற வேண்டும்
  • வசிப்பாளரின் பதிவு/ தகவல் சேர்ப்பு படிவம், மூல ஆவணங்கள், கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் படிவம் ஆகிய அனைத்தும் பதிவு/தகவல் சேர்ப்பு கிளையண்ட் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், அதன்பின் அந்த ஆவணங்கள் அனைத்தும் வசிப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.