ஆதார் என்பது என்ன?

இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். இது வசிப்பாளர்களின் உடற்கூறுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அரசுத் திட்டங்களின் பயன்கள் முறைகேடான வழிகளில் சுரண்டப்படுவதற்கு காரணமான போலி மற்றும் புனையப்பட்ட அடையாளங்களை அடையாளம் கண்டுபிடித்து விடும் என்பதால் எந்த வசிப்பாளரும் போலி அடையாள எண்ணை வைத்திருக்க முடியாது. ஆதார் மூலமான அடையாளக் கண்டுபிடிப்பின் மூலம் போலிகள் நீக்கப்படுவதால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு பிற தகுதியுடைய வசிப்பாளர்களுக்கு பயன்களை விரிவுபடுத்த அரசால் முடியும்.