ஆதார் பெறுவதற்காக தனிநபர்கள் என்னென்ன தகவல்களை வழங்க வேண்டும்?

தேவைப்படும் டெமோகிராபிக் விவரங்கள்:
பெயர்
பிறந்த தேதி-
பாலினம்
முகவரி
பெற்றோர்/காப்பாளர் விவரங்கள் (குழந்தைகளுக்கு தேவைப்படும், பெரியவர்களும் வழங்கலாம்)
தொடர்பு விவரங்கள் செல்பேசி மற்றும் மின்னஞ்சல்
தேவைப்படும் உடற்கூறு விவரங்கள்:
புகைப்படம்
10 விரல் ரேகைகள்
கருவிழிப் பதிவு
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்பட வேண்டிய தகவல் விவரங்களை வரையறுப்பதற்காகவும், அதற்காக கடைபிடிக்க வேண்டிய சரிபார்ப்பு நடைமுறைகளை உருவாக்கவும் திரு.என்.விட்டல் அவர்கள் தலைமையில் டிமோகிராபிக் தகவல்கள் தரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுரைகள் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அதன் அறிக்கையை 09.12.2009 அன்று தாக்கல் செய்தது. அதன் முழு அறிக்கையும் documents/UID_DDSVP_Committee_Report_v1.0.pdf.என்ற இணைய முகவரியில் உள்ளது. அதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட வேண்டிய உடற்கூறு தகவல்களின் தரம் மற்றும் இயல்புகளை வரையறுப்பதற்காக தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் பி.கே கொய்ராலா தலைமையில் உடற்கூறு தரங்கள் குழுவையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைத்தது. இக்குழுவின் அறிக்கை 07.01.2010 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை /documents/Biometrics_Standards_Committee_report.pdf.என்ற இணையதள முகவரியில் உள்ளது.