வசிப்பாளர்கள் மின்னணு ஆதாரை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?

வசிப்பாளர்கள் மின்னணு ஆதாரை கீழ்க்கண்ட இரு முறைகளில் பதிவிறக்கம் செய்யலாம்.

  • பதிவு எண்ணைப் பயன்படுத்தி: வசிப்பாளர்கள் 28 இலக்க பதிவு எண்ணையும், முழுமையான பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்ணையும் பயன்படுத்தி மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லை பெற்றுதான் இந்த நடைமுறையை செய்யமுடியும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லுக்கு பதிலாக காலம் சார்ந்த ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லையும் வசிப்பாளர்கள் பயன்படுத்தலாம். மொபைல் ஆதார் எனப்படும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி இந்தக் கடவுச் சொல்லை உருவாக்கமுடியும்.
  • ஆதார் எண்ணைப் பயன்படுத்தி: வசிப்பாளர்கள் 12 இலக்க ஆதார் எண்ணையும் முழுமையான பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்ணையும் பயன்படுத்தி மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லை பெற்றுதான் இந்த நடைமுறையை செய்யமுடியும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லுக்கு பதிலாக காலம் சார்ந்த ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லையும் வசிப்பாளர்கள் பயன்படுத்தலாம். மொபைல் ஆதார் எனப்படும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி இந்தக் கடவுச் சொல்லை உருவாக்கமுடியும்.