What are அனுமதியில்லாமல் தகவல்களைப் பார்ப்பது அல்லது தகவல் சார்ந்த மோசடிகளுக்கான குற்றவியல் தண்டனைகள் என்னென்ன?

ஆதார் மசோதாவில் இடம்பெற்றுள்ள தகவல் சார்ந்த மோசடிகளுக்கான தண்டனைகள் விவரம் வருமாறு:
  • ஆள் மாறாட்டம் செய்வதன் மூலம் பொய்யான டிமோகிராபிக் அல்லது உடற்கூறு தகவல்களை வழங்குவது குற்றம் ஆகும் - இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
  • ஆதார் எண் வைத்துள்ள ஒருவரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை மாற்றியோ அல்லது மாற்ற முயன்றோ அவரின் அடையாளத்தை எடுத்துக் கொள்வது குற்றம் ஆகும் -இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
  • வசிப்பாளரின் தகவல்களை சேகரிக்க நியமிக்கப்பட்ட நிறுவனம் போன்று நடிப்பது குற்றம் ஆகும் - இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், தனி நபர்களுக்கு ரூ.10,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
  • பதிவின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு தெரிந்தே அனுப்புவது குற்றமாகும்-இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், தனி நபர்களுக்கு ரூ.10,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
  • மத்திய அடையாள தகவல் தொகுப்புக்குள் சட்டவிரோதமாக நுழைவதும், ஹேக் செய்வதும் குற்றமாகும் - இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
  • மத்திய அடையாள தகவல் தொகுப்பை சிதைப்பது குற்றமாகும்- இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.
  • ஒரு வசிப்பாளர் அவருடையது அல்லாத உடற்கூறு விவரங்களை வழங்குவது குற்றமாகும்- இதற்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.