அரசால் வழங்கப்படும் பிற அடையாள ஆவணங்களில் இருந்து ஆதார் எந்த வகையில் வேறுபட்டது?

ஆதார் என்பது வசிப்பாளருக்கு வழங்கப்பட்ட, வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடிய, இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும், எந்த நேரமும் ஆன்லைனில் சரிபார்க்கக்கூடிய12 இலக்க எண் ஆகும். ஆதார் சரிபார்ப்புக்கான விடை ஆம்/இல்லை என்று தான் வரும். ஆதார் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்பது கழிவுகள் மற்றும் கசிவுகளை தடுத்தல், போலி மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குதல், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் சமூகப் பாதுகாப்பு பயன்கள் மற்றும் மானியம் வழங்கலின் தரத்தை அதிகரிப்பது ஆகும்.