விர்ச்சுவல் ஐடி (VID) என்றால் என்ன?
விஐடி என்பது ஆதார் எண்ணுடன் மேப் செய்யப்பட்ட தற்காலிக, திரும்பப் பெறக்கூடிய 16 இலக்க ரேண்டம் எண் ஆகும். அங்கீகாரம் அல்லது e-KYC சேவைகள் செய்யப்படும் போதெல்லாம் ஆதார் எண்ணுக்கு பதிலாக VID ஐப் பயன்படுத்தலாம். ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதைப் போலவே VID ஐப் பயன்படுத்தி சரிபார்ப்பு செய்யப்படலாம். விஐடியிலிருந்து ஆதார் எண்ணைப் பெற முடியாது.