வசிப்பாளர்களின் குறைகள் எவ்வாறு களையப்படுகின்றன?

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஒற்றை தொடர்பாக விளங்கவும், அனைத்து விசாரணைகள் மற்றும் குறைகளைக் கேட்டு தீர்த்து வைக்கவும் வசதியாக தகவல் மையம் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைத்துள்ளது. பதிவு தொடங்கிய நாளில் இருந்து தொடர்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
  • வசிப்பாளர்கள், பதிவாளர்கள், பதிவு முகமைகள் ஆகியோரே இந்த அமைப்பின் பயனர்கள் ஆவர்.
  • ஆதாருக்காக பதிவு செய்யும் எந்த வசிப்பாளருக்கும் அச்சிடப்பட்ட ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் பதிவு எண் இருக்கும். தொடர்பு மையத்துடன் தொடர்பு கொள்வதற்கான எந்த வழியிலும் தொடர்பு கொண்டு ஆதார் உருவாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பதை வசிப்பாளர் அறிய இந்த பதிவு எண் உதவுகிறது.
  • ஆதார் பதிவில் ஈடுபடும் ஒவ்வொரு பதிவு முகமைக்கும் ஒரு தனித்துவமான என் வழங்கப்படும். தொழில்நுட்ப உதவி மையத்தை உள்ளடக்கிய தொடர்பு மையத்தை விரைவாகவும், அதன் குறிப்பிட்ட பிரிவையும் அணுகுவதற்கு இந்த தனித்துவ எண் வழங்கப்படும்.