வசிப்பாளர் நினைத்தால் ஆதாரிலிருந்து வெளியேற முடியுமா?

ஆதாரில் சேராமல் இருப்பதற்கான வாய்ப்பு மட்டும் தான் வசிப்பாளருக்கு உள்ளது. ஆதார் சேவை வழங்கும் கருவியே தவிர வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் அது வடிவமைக்கப்படவில்லை. ஆதார் என்பது அனைவருக்கும் தனித்துவமான ஒன்று என்பதால் அது மாற்றத்தக்கதல்ல. ஆதார் என்பது நேரடியாக ஆஜராகுதல், ஆன்லைன் முறையில் சரிபார்த்தல் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டது என்பதால் ஒரு வசிப்பாளர் ஆதாரை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அது பயன்பாடின்றி அப்படியே கிடக்கும். எனினும், இப்போதைய நிலையில் ஆதார் தகவல் தொகுப்பிலிருந்து வெளியேறுவதற்கான வசதி இல்லை. இதுதொடர்பாக மீண்டும் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு வசிப்பாளரைத் தவிர அவரது ஆதாரை வேறு எவராலும் பயன்படுத்த முடியாது.