மொபைல் ஆதார் செயலியில் வசிப்பாளர்கள் தங்கள் விவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?

  • அ. 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும் அல்லது உங்கள் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யவும்.
  • ஆ. உங்கள் செல்பேசி இணைப்பு செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், அந்த எண்தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யவும்.
  • இ. கட்டாய தகவல்களை உள்ளீடு செய்தபின், திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள சரிபார்ப்புப் பொத்தானை அழுத்தவும். அவ்வாறு அழுத்தியபின் திரையிலிருந்து வெளியில் செல்லக்கூடாது.
  • ஈ. நீங்கள் வழங்கிய தகவல்கள் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் செல்பேசிக்கு வரும். அந்தக் கடவுச்சொல்லை செயலி செல்பேசியிலிருந்து தானாகவே படித்துப் புரிந்துகொள்ளும்.