மொபைல் ஆதாரில் உங்களின் மேம்படுத்தப்பட்ட விவரங்களை எவ்வாறு பார்க்கலாம்?

  • அ. உங்கள் விவரப் பகுதியை திறக்கவும்.
  • ஆ. அண்மையில் மேம்படுத்தப்பட்ட ஆதார் விவரங்களைப் பார்க்க திரையின் மேல் பகுதி வலது ஓரத்தில் உள்ள "View updated Profile-ஐ தேர்வு செய்யவும்.
  • இ. அதை தட்டியவுடன் ஒருமுறை கடவுச்சொல் பெறப்பட்டு, தானாக நிரப்பப்படும். அதை உறுதி செய்து விவரங்களைப் பார்க்க ஓகே பொத்தானை தட்டவும்.
  • ஈ. விவரங்களை ஒத்திசைவு செய்யும் நடைமுறையை தொடங்கும்முன் உங்கள் செல்பேசியில் இணைய இணைப்பு இருப்பதை உறுதி செய்யவும்.
  • உ. வெற்றிகரமாக ஒத்திசைவு செய்தபின் சமீபத்திய ஆதார் விவரங்கள் உங்கள் திரையில் தெரியும்.