மொபைல் ஆதார் செயலியில் அதிகபட்சமாக எத்தனை புரஃபைல் விவரங்களை சேர்க்க முடியும்?

ஒரு பயனாளர் அவரது செல்பேசியில் 3 புரஃபைல் விவரங்களை சேர்க்க முடியும். இதற்கு அவை ஒரே செல்பேசி எண்ணில் ஆதாருடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தானாக நிரப்பிக்கொள்ளக்கூடிய ஒருமுறை கடவுச்சொல் மூலம்தான் செயலியைப் பயன்படுத்த முடியும் என்பதால், வேறு செல்பேசி எண்ணில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை சேர்க்க முடியாது. உங்கள் குடும்பத்தில் உள்ள ஏதேனும் உறுப்பினர்கள் உங்களைப் போலவே ஒரே செல்பேசி எண்ணை ஆதாரில் பதிவு செய்திருந்தால், அவர்களின் விவரங்களையும், உங்கள் மொபைல் ஆதார் செயலியில் சேர்த்துக்கொள்ளலாம்.