ஒரு குடியிருப்பாளருக்கான பல முகவரிச் சான்றுகள் (எ.கா. தற்போது மற்றும் சொந்த ஊர்) கிடைக்கும் இடங்களில், UIDAI எந்தச் சான்றினை ஏற்கும், மேலும் ஆதார் கடிதத்தை எங்கு அனுப்பும்?

UIDAI குடியிருப்பாளரிடம் அவர்/அவள் ஆதாரில் பதிவு செய்ய விரும்பும் முகவரியை (பல முகவரி சான்றுகளிலிருந்து) உறுதிப்படுத்தும்படி கேட்கிறது. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஆதார் கடிதம் வழங்கப்படும். குடியிருப்பாளரின் தேர்வு மற்றும் ஆதார ஆவணங்களின் அடிப்படையில், UIDAI டெமோகிராபிக் விவரங்களைப் பதிவு செய்கிறது.