ஆதார் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்னிடம் இல்லை. ஆனாலும், நான் பதிவு செய்யலாமா?

ஆம், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குடும்ப அட்டையில் அவரது பெயர் இருந்தால், அதைக் கொண்டு ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாம். இத்தகைய சூழலில் குடும்பத் தலைவர் முதலில் செல்லுபடியாகக் கூடிய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றைக் காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவரது ஆதார்/ ஆதார் பதிவு எண்ணைக் கொண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மொத்தம் 8 வகையான உறவுமுறை ஆவணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய அளவில் செல்லுபடியாகக் கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.