வசிப்பாளர்களுக்கு தனியாக அடையாளச் சான்று/ முகவரிச் சான்று இல்லாத நிலையில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணி அட்டை ஆகியவை செல்லத்தக்க அடையாள/முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுமா?

ஆம், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருந்து, அதில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் அடையாளம் மற்றும் முகவரியை அவர் சரிபார்த்து உறுதி செய்யும்பட்சத்தில் அந்த ஆவணங்கள் அடையாள/ முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப் படும். குடும்பத்தலைவர் சரிபார்த்து உறுதி செய்த ஆவணங்களை பதிவாளரால் நியமிக்கப்பட்ட சரிபார்ப்பவர் பார்த்து உறுதி செய்து கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.